Turmeric is an Indispensable part of the Indian cooking. Turmeric powder is produced from pure turmeric rhizomes and is packed with curcumin, a strong antioxidant with powerful anti-inflammatory properties ,increases immunity, relieves pain, improves digestion, lowers cholesterol ect. Add it to your curries, Mix into smoothies, brew a cup of “Golden Milk” and supercharge your favorite recipes.
Why us ? We provide 100% pure Turmeric powder , grown in our own land which is free from chemical fertilizers and pesticides for more than a decade.Watch the process of making our turmeric powder in the below link
https://www.youtube.com/watch?v=tkeTl5mVjz0&list=UUj8C-G-nSPWBYlcjzL65PIw&index=1
Why to buy Aaranya Pasumaikudil's Turmeric Powder?
✔ 100 % Natural
✔ NO added preservatives
✔ NO added atrificial colours
✔ NO added artificial flavours
#Golden turmeric latte #High curcumin turmeric powder #Best antioxidant #Indian spices #Indian cooking #Benefits of turmeric powder Buy Turmeric Powder Online #Turmeric Powder in Herbal Remedies #Turmeric Powder for Cooking #Turmeric Powder #Turmeric Powder in Herbal Remedies #Turmeric Powder for Skin #increase immunity #aaranya Pasumaikudil
#பசுமஞ்சள் #Raw_Turmeric
மஞ்சள் பயிர் முற்றி விளைந்த பிறகு மண்ணிலிருந்து தோண்டி எடுத்த பச்சை மஞ்சளை #பசுமஞ்சள் என்கிறோம்.
#பொங்கல்மஞ்சள் பார்த்திருப்பீர்களே அதுதான். ஆனால் #பொங்கல்_மஞ்சள் முற்றிலும் விளையாதவை. முழுப் பயன் தரும் பசுமஞ்சள் என்பது, தன் வாழ்நாள் முழுவதையும் முடித்த பிறகு மஞ்சள் தாள்கள் பழுத்து வாடி மடங்கி சருகானதும் தோண்டி எடுப்பது. இதில் தான் குர்குமின் எனும் சத்து பூர்த்தி அடைந்து இருக்கும்.
மஞ்சளைப் பற்றியும், மஞ்சளில் கிடைக்கும் #குர்குமின் #Curcumin பற்றியும், அதன் பலப்பல பலன்கள் பற்றியும் ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கிறது. விரும்புபவர்கள் படிக்கலாம்.
பொதுவான சில பலன்கள் கீழே.
#பசுமஞ்சள்_நன்மைகள்
1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.2. #Anti_inflammatory, #antiviral, #antifungal, #antibacterial பண்பு நலன்கள் நிறைந்து இருப்பதால் உடலின் ஒட்டுமொத்தப் பாதுகாவலனாகத் திகழ்கிறது .
3.சளி காய்ச்சல் இருமல் உடல் வலி தசை வலி எலும்பு வலி போன்ற உடல் உபாதைகளைத் தடுக்கிறது.
3. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நலனைக் காக்கிறது.
4. ரத்த அழுத்த நோயைச் சரி செய்கிறது.
5.#டயாபட்டிக் எனப்படும் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கிறது.
6. நம் உடலில் ஏற்படும் வெளிப்புற சிராய்ப்புகள், காயங்கள் ஆகியவற்றை மஞ்சள் எவ்வளவு விரைவில் ஆற்றுகிறது என்பதைப் பார்த்திருப்போம். அதேபோல உடலினுள் ரத்த நாளங்களில் ஏற்படும் காயங்களையும் விரைவில் ஆற்றுகிறது. #HsCRP புள்ளிகளால் அளவிடப்படும் இந்த உடல்நல ஆய்வானது, இப்புள்ளிகள் அதிகமாக இருந்தால் #நீரிழிவு மற்றும் #இதயநோய்க்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து பசுமஞ்சள் எடுத்த பின் இந்த அளவுகள் குறைந்து இருப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.
7. மஞ்சளிலுள்ள குர்குமின் ஒரு சக்திவாய்ந்த #ஆன்டி_ஆக்ஸிடன்ட் ஆகும், இது நமது உடலில் உள்ள செல்கள் ஃப்ரீ ரேடிக்கல் எஃபக்ட்டால் சேதமடைவதைத் தடுத்து #இளமையைத் தக்க வைக்கிறது .
8. #அல்சைமர் நோய் சிகிச்சையில் உதவுகிறது உதவுகிறது.
9. பெண்களுக்கு ஏற்படும் #பிசிஓடி கட்டிகள், கர்ப்பப்பை சுவர் தடிப்பது, ஒழுங்கற்ற மாதாந்திர சுழற்சி ஆகியவற்றைச் சரி செய்கிறது.
10. மஞ்சளை உட்கொள்வது கிளைக்கோமாவின் வளர்ச்சியைத் தடுத்து அதனால் ஏற்படும் பார்வை இழப்பைச் சரி செய்கிறது.
11. செரோடோனின் மற்றும் டோபமைனை இயற்கையாகச் சுரக்கச் செய்வதால் மன அழுத்தம் நீங்க உதவுகிறது.
மேற்குறிப்பிட்ட பலன்கள் அல்லாமல் இன்னும் பல்வேறு பயன்களை உபயோகித்தவர்கள் மூலம், ஆதாரங்களுடன் #நெல்லைசாரதி தனது #ஃபேஸ்புக் பக்கத்தில் #பூபதே #GTC இணைப்பில்
தெளிவுபடுத்தி உள்ளார். அதனை அவசியம் படியுங்கள்.
#பச்சைமஞ்சளை எப்படி சாப்பிடுவது?
1. #வெறும்வயிற்றில்; இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை நேரடியாகக் குடிக்கவும். பிறகு ஆட்காட்டி விரல் (Index finger size) அளவு பசுமஞ்சளைத் தோல் நீக்கி அதனுடன் பத்து மிளகு இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக மென்று சாப்பிடவும். (இதைச் சொல்லும் பொழுது கடினமாகத் தெரியலாம், ஆனால் சாப்பிடுவது எளிமையாகத்தான் இருக்கும். எப்படி வெற்றிலைப்பாக்கு போடும்போது வெற்றிலைத் தனியாக, பாக்குத் தனியாகச் சாப்பிடுவது கடினமாகவும், வெற்றிலைப் பாக்கு சுண்ணாம்பு இணையும் பொழுது சுவையாகவும் இருக்கிறதோ அப்படித்தான் இதுவும் நன்றாக இருக்கும்.)
மென்று சாப்பிடுவதால் வாய் மஞ்சளாகும். பல் தேய்த்தால் சரியாகிவிடும்.
அடுத்து நான்கு பல் பூண்டை குட்டிக் குட்டியாக மாத்திரை அளவில் வெட்டி 10 நிமிடங்கள் காற்றோட்டமாக வைத்த பின் தண்ணீர் கொண்டு விழுங்கவும். ( பூண்டு உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கெட்டக் கொழுப்பை கரைத்து விடும்)
2. தேங்காய் எண்ணெய் குடிப்பதற்குப் பதிலாக கொழுப்பு உணவு உண்டபின் ( குறைந்தது 300 கிராம் இறைச்சி, அல்லது நான்கு முட்டை ) மேற்குறிப்பிட்ட முறையிலும் பசுமஞ்சள் மற்றும் பூண்டைச் சாப்பிடலாம் .
3. #துவையல்_சட்னி;
விரல் நீள அளவு சுத்தப்படுத்திய மஞ்சள், 10 மிளகு, 2 சின்ன வெங்காயம், மூன்று பல் பூண்டு மற்றும் தேவையான உப்பு சேர்த்து அரைத்து சுடு சாததத்தில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது நெய் கலந்தும் சாப்பிடலாம்.
இத்துடன் கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை, புதினா, இஞ்சி இவற்றில் எதை வேண்டுமானாலும் சிறிதளவு பச்சையாகவே சேர்த்து அரைத்தும் சாப்பிடலாம்.
4. #பசுமஞ்சள்_ஜுஸ்;
ஒரு துண்டு சுத்தப்படுத்திய பசு மஞ்சள் ஒரு நெல்லிக்காய் பத்து மிளகு போட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும் அத்துடன் தேன் அல்லது நாட்டு சர்க்கரை பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
5. #முட்டையில்;
முட்டை ஆம்லெட் ஊற்றிய பிறகு அதன் மேல் துருவிய மஞ்சள் சிறிதளவு தூவி சாப்பிடலாம்.
#பசுமஞ்சள் வேண்டுவோர் 9600800221 க்கு ஒரு வாட்ஸ் அப் தகவல் அனுப்புங்க.
சேலத்தில் இருப்பவர்கள் அல்லது வாய்ப்புள்ளவர்கள் #சேலம் குரங்குசாவடியில் உள்ள #ஆரண்யாபசுமைக்குடிலில் காலை பதினொரு மணி முதல் மாலை ஆறு மணிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு எண் 9600800221
top of page
₹55.00Price
bottom of page


