#நாட்டுச்சர்க்கரை (Country Sugar, jaggery powder) என்பது கரும்புச் சாற்றை நன்கு கொதிக்க வைத்து, பாகுபதம் ஆக்கி மேலும் காய்ச்ச கெட்டியாகும் . அதைப் பெரிய மரத் துடுப்பு கொண்டு கிளறி தேய்க்கத் தேய்க்க உதிர் உதிராகத் தூளாகும். இதுவே நாட்டுச் சர்க்கரை எனும் பாரம்பரிய இனிப்பூட்டி ஆகும்.
இது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதை வெளுப்பாக்க சல்ஃபர் மற்றும் பல விதமான வேதிப் பொருட்களை உபயோகிப்பார்கள். பழுப்பு நிறத்தால் நமக்குக் கெடுதல் எதுவும் இல்லை ஆனால் வெளுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் ஆபத்து உண்டு.
ரசாயனங்கள் இல்லாமல் தயாரிக்கப்படும் நாட்டுச் சர்க்கரையில் கரும்பில் உள்ள சுவையும், இரும்புச் சத்தும், கால்சியமும், பொட்டாசியம் மெக்னீசியமும் அப்படியே தக்க வைக்கப்படுகிறது.
இந்த நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள்; இரும்புச்சத்து (Iron): ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது. கால்சியம் (Calcium): எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு நல்லது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்: உடலின் ஆற்றலை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கவும் உதவுகின்றன. மேலும் இதில் உள்ள சுண்ணாம்புச்சத்து செரிமானப் பாதையைச் சீராக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது. ரசாயனங்கள் இல்லாததால், உடலின் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியைப் பாதிக்காது.
வெள்ளை சர்க்கரை (சீனி அஸ்கா ) என்பது மிகப் பெரிய ஆலைகளில் பல்வேறு விதமான படி நிலைகளில் சல்பர் போன்ற இரசாயனங்கள் உதவியுடன் தயாரிக்கப்படுவது. இதன் வெள்ளை நிறமும், படிகம் போன்ற தோற்றமும், உலர்வான தன்மையும் பார்ப்பதற்குச் சிறப்பாக இருக்கும். ஆனால் இதில் கலோரிகள் மட்டுமே உண்டு. அதனால், பால், காபி, தேநீர், மற்றும் பாரம்பரிய பலகாரங்களான புட்டு, கொழுக்கட்டை, பாயாசம் போன்றவற்றில் இரசாயனங்களால் உண்டாக்கப்படும் வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து நாட்டுச்சர்க்கரை மட்டுமே பயன்படுத்துவோம். இதைப் பயன்படுத்தும்போது அதன் சுவையும் ஆரோக்கியமும் தனித்துவமாக இருக்கும்.
*குறிப்பு* நீரிழிவு நோயாளிகள் வெள்ளைச் சர்க்கரை தவிர்த்து நாட்டுச் சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள் அது தவறு. முடிந்தவரை எந்தவிதமான இனிப்பு மற்றும் மாவு சத்து உள்ள பொருட்களை இவர்கள் தவிர்ப்பது நலம்.
#நாட்டுசர்க்கரை #NattuSakkarai #CountrySugar #JaggeryPowder #aaranyapasumaikudil aaranyapasumaikudil.com 9600800221


